பதினைந்தாண்டுகள் கழித்து வெளிவருகிற சிபிச்செல்வனின் மூன்றாவது கவிதை தொகுப்பு இது. முந்தைய இரண்டு தொகுப்புகளிலிருந்து எளிமையென்பது எளிதல்ல என்பதையும் உணர்த்துகிறது.
நவீன சமுகத்தின் அன்றாட வாழ்வின் தனிமனித சிக்கல்களை,நெருக்கடிகளைப் பொதுமைப்படுத்தி சில தற்கணங்களை எப்போதைக்குமான கவிதைகளாக்கியுள்ளார். வாழ்வின் பொழுதுகளை,பருவகாலங்களை, தினசரி நிகழ்வுகளை, அதன் சில குறுக்குவெட்டுகளைப் பேசும் கவிதைகளை.
தொழில்நுட்பங்களை, அதன் எந்திரத்தன்மைகள் தனிமனித வாழ்வில் ஏற்படுத்திய சிடுக்குகளை மற்றும் அதன் வலிகளை, வேதனைகளை நவீனத்தின் இருள்வெளிகளை உங்களுக்கான அனுபவங்களாக்கும் கவிதைகள். நிகழ்காலத்தைப் பற்றி நிகழ் கால அரசியல் வரலாற்றைப் பற்றி பேசுவதுபோல எளிமை காட்டி எக்காலத்திற்குமான ‘நிகழ்காலம்’ கொண்டிருக்கிற கவிதைகளை இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன.
வாசிப்பவனுபவத்தை எளிதில் உங்களுக்கு கடத்தும்.
Be the first to rate this book.