இந்தியப் பெருநிலத்தின் மத்தியகால வரலாறு பண்டைய வரலாறும் நவீன வரலாறும் பேசப்பட்ட அளவிற்கு அதிகம் பேசப்படாதது. கி.பி.800 ஆம் ஆண்டிலிருந்து 1800 வரையிலான 1000 ஆண்டுகள், கால அளவிலும் மாற்றங்களின் தன்மையாலும், நவீன இந்திய வரலாற்றிலும், மக்கள் வாழ்விலும் மிகுந்த தாக்கம் உடையதாகும். மிக எளிய; ஆனால் தெளிவான ஆங்கில நடையில் உள்ள நூலின் எளிமையும் வலிமையும் குறையாமல் நல்ல தமிழில் தந்துள்ளார், மொழிபெயர்ப்பாளர் வேட்டை. எஸ்.கண்ணன். அவருடைய நீண்ட இடதுசாரிக் களப்பணி அனுபவமும், இதழியல் அனுபவமும் கை கொடுத்துள்ளன எனத் தெரிகின்றது. சொல்லவரும் கருத்தை எளிமையாய் ஆனால் வாசிப்பவருக்கு மேலும் வாசிப்பைத் தொடர ஆர்வமூட்டுவதாக சொல்லும் லாவகம் அவருக்கு வாய்த்துள்ளது.
Be the first to rate this book.