* சிறந்த கவிதை நூல் - 2018 @
கவிஞர் குமரகுருபரன் நினைவு விருது
திணை - வெளி இரண்டும் நிகழ்த்தும் அனந்த கோடி விளையாட்டுகள்தான் ச.துரை கவிதைகளின் உள்ளார்ந்த பண்பாய் இருக்கின்றன. அவையே பிரதிகளில் இருப்பும் இருப்பின்மையும் வலியும் மகிழ்ச்சியும், சுயமும் மற்றமையுமென இருமைகளாகவும் மாறுகின்றன. இந்த இருமையை ஒன்றில் ஒன்றைப் பிரதியிட்டும் நிரப்பியும் கழித்தும் மொழியின் வழியே தீராத விளையாட்டை நிகழ்த்திக்காட்டுகின்றன இக்கவிதைகள். மற்றமைகளின் வழியே தன் இருப்பை சூசகமாக வெளிப்படுத்தும் பண்பும், எடையற்ற தர்க்கங்கள் வழியே மொழிக்குள் கவிதைகளை நிகழ்த்திக்காட்டுவதுமான மாயமும், இக்கவிதைகளின் இயல்புகள். இந்த இயல்பே, இக்கவிதைகளை சமகாலத்தின் கவித்துவம் நிரம்பியதாக மாற்றுகிறது..
- இளங்கோ கிருஷ்ணன்
Be the first to rate this book.