பிறப்போடு வந்து, பழக்கத்தோடு கலந்து, அனுபவமாகி உடலோடு ஒட்டிவிடுகிற உணர்ச்சிதான் பின்னால் திடீரென்று கிளர்ச்சியடைந்து கவிஞனது இதயத்திலிருந்து வார்த்தைகளைக் கொண்டு வந்து வெளியிலே கொட்டுகிறது. ஆனால் கார்ட்டூன் என்பது அதைவிட பலபடிகள் மேலே சென்று நடக்கும் சம்பவங்களை உணர்ச்சிகரமாக பார்த்து, அதை தன் உள்வாங்கி கற்பனைத் திறத்துடன் கலந்து, காண்போர் உள்ளத்தில் புன்னகையை வரவழைத்து, அந்த கருத்தின் ஆழத்தை சித்திரத்துடன் இரண்டு வரிகளில் குறுகத் தரித்த குறள்போல் வெளிப்படுத்துவது என்பது நூறாயிரத்தில் ஒருவருக்குத்தான் ஆண்டவன் அருள் புரிவான். அந்த அருள் பூரணமாக மதிக்கு, மதிக்கத்தக்க வகையில் கிடைத்திருக்கிறது.
டாக்டர். அ.ப.ஜெ. அப்துல் கலாம் : கார்ட்டூன் என்ற சொல்லை கேலிச்சித்திரம் என்றோ, சிரிப்புப்படம் என்றோ சொல்லுவது முழு அர்த்தத்தைத் தருவதில்லை. எல்லார் மனத்திலும் இருக்கிற, அவரவர் காலம் சம்பந்தப்பட்ட நடப்புகளின் மீது ஒரு காலத்தில் தோன்றி மறைகிற ரகசியமான கமெண்டுகளை பொறிபோன்று வெடித்துச் சிதறி மறைகின்ற சிந்தனைகளை உள்வாங்கி, காமிரா வெளிச்சத்தில் எடுத்துக்கொண்டு திருப்பித் தருவது போன்ற அரிய கலை இது.
ஜெயகாந்தன் : ஒரு தலையங்கம் முழுக்க எழுதி ஊட்ட வேண்டிய அறிவை ஒரு சித்திரத்தின் மூலம் எளிமையைய் வலிமையாய்ச் சொல்லிவிடும் "மதி"யின் மதி மதிக்கப்பட வேண்டியது.
வைரமுத்து : ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளியாகும் கார்ட்டூன்களைப் படைக்கின்ற புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட்கள் வரிசையில் வைக்கின்ற அளவுக்குத் திறமை படைத்தவர் மதி.
சோ : மதியின் அரசியல்வாதிகள் பொதுவாக, பொய்யான சிரிப்புடனும் (இளிப்பு?!) காமிராவுக்கான Body Language உடனும் இருப்பதை நீங்கள் கவனிக்கலாம்! மதியின் கார்ட்டூன்களைப் புரட்டிப் பார்க்கும்போது நம் நாட்டு அரசியல் எவ்வளவு தமாஷாகவும், விபரீதமாகவும், பரிதாபமாகவும், பயமாகவும் இருக்கிறது என்பதும் புரியும்!
Be the first to rate this book.