ஸெல்மாவின் முதல் புத்தகமான ‘மதகுரு’தான் அவருடைய மிகச் சிறந்த புத்தகமாகவும் 'மதகுரு' கருதப்படுகிறது. இப்புத்தகத்திலுள்ள கதைகள் அவர் வாழ்ந்த வான்லேண்ட் பிராந்தியத்தில், அவர் பிறப்புக்கு அரை நூற்றாண்டுக்கு முன் நிலவிய வாழ்வு குறித்த அவருடைய பாட்டியார் கூறியவற்றிலிருந்து, கிளைத்தவையாகும். 1909-ல் இவர் நோபல் பரிசு பெற்றார். பின் ஸ்வீடிவ் அக்காடமியும் இவரை உறுப்பினராக்கிக் கவுரவித்தது. அரசியல் பற்றியோ, மதம் பற்றியோ தீவிரமான அபிப்ராயங்கள் சொல்லாமல், பெண் எழுத்தாளர்களின் பட்டுக்கொள்ளாத ஜாக்கிரதையுடன் வாழ்ந்தார். 1940-ல் காலமானர்.
'மதகுரு’ விவலிய நூல் போல் மேலிட்ட எளிமையும், உள்ளே ஆழமும் கொண்டது. நாடோடிக் கதைகள், புராணக் கதைகள் ஆகியவற்றின் சூழல் நிறைந்தது. அவர் காலத்தைத் தாண்டிய ஒரு சுதந்திர உலகம் அது.
Be the first to rate this book.