1789 இல் நடைபெற்ற பிரெஞ்சு புரட்சி மன்னராட்சியையும் நில உடைமையையும் எதிர்த்து முதலாளி வர்க்கத்தின் தலைமையில் நடைபெற்ற முதல் புரட்சி. முதலாளி வர்க்கம் தன் சொந்த நலனுக்காகவே உரிமைக்கோரி போராடிப் பெற்றது. அதே போன்று தொழிலாளிகள் தங்களுக்கான உரிமையை கேட்ட போது முதலாளி வர்க்கம் அவற்றை துடைத்தழித்தது.
தொழிலாளி வர்க்கம் தனக்கென்று தனி தத்துவம், அரசியல் அமைப்புகள் பற்றிய தெளிவான பார்வையைக் கொண்டிருக்காததன் விளைவை அது சந்தித்தது. இதைத் தொழிலாளி வர்க்கம் புரிந்து கொண்டபோது பாட்டாளிகளுக்கு அறிவியல் அடிப்படையிலான தத்துவத்தை பேராசான் மார்க்சும் ஏங்கெல்சும் உருவாக்கி அளித்தனர். இதுவே மார்க்சியம் எனப்பட்டது.
இந்த தத்துவத்தை எளியவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் மதிப்பிற்குரிய தோழர். அ.கா ஈஸ்வரன் அவர்கள் மிக எளிமையான வகையில் தமிழ் சமூகத்துக்கு வழங்கியுள்ளார்.
Be the first to rate this book.