ஒரு செயல்துணிவுள்ள ஊழியனோ, தொழிலாளியோ பிசகில்லாமல் புரட்சிக்குரிய பணியைச் செய்ய வேண்டுமானால், அவனுக்கு ஒன்று தேவைப்படுகிறது. விஷயங்களைச் சரிவர ஆய்ந்தறிந்து அதன் அடிப்படையில் தர்க்கம் செய்து முடிவுக்கு வருவதற்கு ஒரு சரியான ஆய்வுமுறை அவனுக்கு இருக்க வேண்டும்..... என்றைக்கும் ஒரே மாதிரியாயில்லாமல் மாறிக்கொண்டே இருக்கிற விஷயங்களையும் நிலைமைகளையும் பார்த்து, அலசி ஆராயும் ஓர் ஆய்வுமுறைதான் தேவை. தத்துவத்தை நடைமுறையில் இருந்து பிரிக்காத ஓர் ஆய்வுமுறை இயக்கவியலை வாழ்விலிருந்து என்றுமே பிரிக்காத ஓர் ஆய்வுமுறை அதுதான் அவனுக்கு வேண்டியது.
அப்படிப்பட்ட ஆய்வுமுறை இயக்கவியல் பொருள் முதல்வாதம் என்ற தத்துவத்தில் காணப்படுகிறது.
- ஜார்ஜ் பொலிட்ஸர்
Be the first to rate this book.