இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றையும், அதன் முன்னோடிகளாக இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நவரத்தினங்களாக திகழ்ந்த தலைவர்களின் வாழ்க்கையைப் பற்றியும் ஒருசேர அறிந்து கொள்ளும் வாய்ப்பு இந்த புத்தகத்தை படிக்கும்அனைவருக்கும் கிடைக்கும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நவரத்தினங்களாகத் திகழ்ந்த இந்த தலைவர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையை சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் துவக்கி, படிப்படியாக வளர்ந்து கம்யூனிஸ்டாக உயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். மாபெரும் சுதந்திர போராட்ட வீரர்களாக அரசியல் வாழ்க்கையை துவக்கிய இவர்கள் காங்கிரசின், காந்தியின் மிதவாதப் போக்கையும், சமரசக் கொள்கைளையும் ஏற்க முடியாமல் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியிலும் சேர்ந்து பின்னர் கம்யூனிஸ்ட்களாகவும் மாறினர் என்பது இயக்கவியல் வரலாற்றின் போக்கை தெளிவாக சுட்டிக் காட்டுகிறது.
Be the first to rate this book.