இந்த நூலின் ஆசிரியர் டேவிட் ஹார்வி கடந்த நாற்பது ஆண்டுகளாக ‘மார்க்ஸின் மூலதனம்’ குறித்து தொழிலாளர் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்க்கும் வகுப்புகள் நடத்திய அனுபவம் கொண்டவர். மார்க்ஸின் இயக்கவியல் முறையால் கவரப்பட்ட டேவிட் ஹார்வி அதன்வழியாக ஏகாதிபத்தியத்தின் உலகமயமாக்கலை ஊடுருவிப் பார்க்கிறார். அவரது இந்நூல் மூலதனம் நூலுக்கு ஒரு வழிகாட்டி மட்டுமல்ல, அரசியல் நோக்கமும் கொண்டதாகும்.
மூலதனக் குவிப்புக்கு எதிரான அரசியல் போராட்டமானது எந்தளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை எடுத்துரைப்பதுடன், பாரம்பரியமான தொழிலாளி வர்க்கப் போராட்டத்தையும் உயர்த்திப்பிடிக்கிறது. ஏகாதிபத்தியம், இப்போதும் புதிய சந்தைகளுக்காக ஒடுக்குமுறையான அரசியல் மற்றும் ராணுவ வழிமுறைகளை கையாள்கிறது என்பதையும் இந்நூல் பகிரங்கப்படுத்துகிறது.
Be the first to rate this book.