இன்றிருக்கும் காலாவதியான, நேர்மையற்ற முதலாளித்துவ அமைப்பு முறையை உருமாற்ற தம்முடைய வாய்ப்பாக சீர்திருத்தத் தன்மை, புரட்சிகரத் தன்மை ஆகிய இரண்டும் கொண்ட நடைமுறைத் தீர்வுகளை டார்பர் முன்வைக்கிறார். எல்லா இடங்களிலும் இருக்கும் சமூக, சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களுக்கு ‘மார்க்ஸின் ஆவி’ இன்றியமையாத கையேடு.
மார்க்ஸின் கருத்துகள் வெகுசன அளவில் பரவுவதற்கான சில இடைநிலை முன்மாதிரிகளை இந்நூல் முன்வைக்கிறது. சோசலிஷம் என்ற மாற்று ஏற்பாட்டை நோக்கி நகரும் பலவகைச் சமூகப் பிரிவினர் என்ற கருத்தை இந்நூல் அழுத்தமாக முன்வைக்கிறது. திருத்தல்வாதம் என்று இந்நூலை நிராகரிப்பவர்கள் கூட இந்நூலினுள் பேசப்பட்டுள்ள அடர்த்தியான விஷயங்களுக்காக இந்நூலை வாசிக்கலாம். மார்க்ஸின் ஆவி செய்யும் சேட்டைகளை அனுபவிக்கும் உணர்வு நிச்சயமாகக் கிடைக்கும். மார்க்ஸியத்தில் தொடர்புடைய அனைவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல்.
Be the first to rate this book.