எமிலி பர்ன்ஸின் மார்க்சியம் என்றால் என்ன? புதிய மாணவர்களுக்கான அறிமுகமாகவும், கடந்த கால மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு ஒரு புதிய புத்துணர்ச்சி ஊட்டுவதாகவும், போதுமான வழிகாட்டியாகவும் இருக்கும். இந்த சிறு புத்தகம் படித்துவிட்டு மறந்து போவதற்கானதல்ல. இது மார்க்சியத்தை சுருக்கமாக விளங்க வைப்பதோடு, மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டவும், வாசிப்பாளர்களை தீவிர ஆய்வின்பால் திருப்பிவிடவும் செய்யும். இந்நூல், மார்க்சியத்தின் புதிய புலனாய்வாளர்களுக்கு அறிவியல் சோசலிசத்தின் கோட்பாடுகள் பற்றிய கூடுதல் அறிவைத் தரும். மார்க்சியத்தை போதிக்கிற ஒவ்வொரு விரிவுரையாளருக்கும் ஒவ்வொரு மார்க்சியவாதிக்கும் இன்னும் புதிய விசயங்களைக் கற்றுத்தரும்.
Be the first to rate this book.