மார்க்ஸ் அளவிற்கு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட சிந்தனையாளர் வேறொருவர் இல்லை. கடந்த 150 ஆண்டுகளாக அவர் பெயரைப் பயன்படுத்தப்படாத துறையேதுமில்லை. உலகெங்கும் எண்ணற்ற இயக்கங்கள் அவர் பெயரால் அவர் கற்பித்தலின்படி நடப்பதாகக் கூறுகின்றன. ஆளும் தரப்போ மார்க்சியத்தின் மரணத்தை தினசரி ஜெபம் போல கூறிவருகின்றது. காலமும் மண்ணும் மூடமுடியாத மார்க்சை தவறான விளக்கங்கள் மறைந்துள்ளன. தவறான விளக்கங்களை அவரது எதிரிகள் மட்டுமல்ல; நண்பர்களும் தந்திருப்பதாகக் கூறும் எர்னஸ்ட் ஃபிஷர், தனது சுருக்கமான நூலில் மார்க்சின் முக்கியமான கருத்துகளை அவற்றின் பின்னணி காலச் சூழலோடு, மார்க்சின் சொந்த சொற்கள் கொண்டே விளக்குகின்றார்.
Be the first to rate this book.