மார்க்ஸின் வாழ்க்கை வரலாறு குறித்து ஏராளமான நூல்கள் வந்துள்ளன. இது அதிலொன்று இல்லை. மார்க்ஸின் பிறப்பு என்பது, இன்று நம்மால் மார்க்ஸியம் என அறியப்படும் ஒரு கருத்தியல் கட்டமைப்பின் பிறப்புதான். எங்கல்ஸில் ஆரம்பித்து நாமெல்லோருமே மார்க்சியம் என அழைத்தாலும், மாமேதை மார்க்ஸ் அவர்களால் ‘விஞ்ஞான சோசலிசக் கோட்பாடுகள்’ என்றே அழைக்கப்பட்டது. இந்த கருத்தியல் சித்தாந்தக் கட்டமைப்பு ஒருநாள் காலையில் முழுமையான ஞானமாக வந்திறங்கியதல்ல.
Be the first to rate this book.