பேராசான்களான மார்க்ஸ் - எங்கல்ஸ் ஆகியோரின் எழுத்துகளில், தவிர்க்கவே இயலாத இன்றியமையாத எழுத்துகளின் தொகுப்பே இது. இந்நூலடுக்கு, மாமேதை லெனின் அவர்களின் அறிவுறுத்தலின்படி புகழ்பெற்ற மார்க்சிய அறிஞர் டேவிட் ரியாஸ்னோவ் அவர்கள் தலைமையிலான குழு பல்லாண்டுகள் பணியாற்றிப் பதிப்பித்த 50 புத்தக அடுக்காக பல்லாயிரம் பக்கங்களாக விரியும் நூல்களிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை. மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்கள் என லெனின் அவர்களாலேயே வரையறுக்கப்பட்ட மார்க்சிய தத்துவம், பொருளாதாரம், அரசியல் ஆகிய மூன்று தளங்களிலும் மார்க்சும், எங்கல்சும் எழுதிய அடிப்படைக் கருத்துகளைக் கற்க தேவையானதும், போதுமானதுமான தொகுப்பு.
Be the first to rate this book.