உயிரி உலகில் பரிணாம வளர்ச்சி விதியை டார்வின் கண்டு பிடித்ததைப் போல மானுட வரலாற்றில் பரிணாம வளர்ச்சி விதியை கண்டுபிடித்தவர் மார்க்ஸ். இதுவரை சித்தாந்த புதருக்குள் சிக்குண்டிருந்த மானுடம் அரசியல் அறிவியல் மதம் கலை முதலானவற்றில் கவனம் செலுத்துவதற்கு முன்னர் உண்ணவும் பருகவும் இருக்கவும் உடுக்கவும் வேண்டும் எனும் மிக எளிய உண்மையை கண்டு பிடித்தவர் அவரே! இப்படி மற்ற அறிவியல் அறிஞர்களை விட தனித்துவமான ஒரு சமூக விஞ்ஞானி தான் மார்க்ஸ்.
அதேபோல் ஏங்கல்ஸின் படைப்புகள் அறிவியல் உலகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. துவக்கத்திலிருந்தே அறிவியலுக்கும் உற்பத்தி திறனுக்குமான உறவு குறித்த புரிதல் ஏங்கல்சிடம் ஆழமாக இருந்து வந்தது. பரிணாம வளர்ச்சி குறித்த கருத்தை டார்வினுக்கு முன்னதாகவே ஏங்கல்ஸ் குறிப்பிட்டிருக்கிறார். அளவு மாற்றம் குண மாற்றத்தை உருவாக்கும் என்ற ஹெகலின் கருத்திற்கு அறிவியல் அடிப்படையை மெண்டல் உருவாக்கிய தனிம ஆவர்த்தன அட்டவனையை குறிப்பிட்டு ஏங்கல்ஸ் விளக்கி இருக்கிறார்.
Be the first to rate this book.