மாலைமலர் நாளிதழில் டாக்டர் கமலி ஸ்ரீபால் எழுதிய மருத்துவக் கட்டுரைகளின் தொகுப்பு. மனிதனுக்கு உணவு, உடை, உறைவிடம் ஆகியவை அடிப்படை தேவை ஆகும். அதைப்போலவே ஆரோக்கியமும் அவசியத் தேவை. அதன் அடிப்படையில் நமது நலவாழ்வுக்குத் தேவையான அனைத்து மருத்துவச் செய்திகளையும் இந்த நூலில் டாக்டர் ஸ்ரீபால் அனைவருக்கும் புரியும்படி எளிய முறையில் எடுத்துக் கூறுகிறார். இருதயத்தைப் பாதுகாக்கும் வழிமுறைகள், தலைவலி, வாய்புண், நெஞ்சு எரிச்சல் ஆகியவற்றை தவிர்க்கும் வழிமுறைகள், சிறுநீரகக் கல், கால் கை முதுகு வலிகள் வராமல் தடுக்கும் முறைகளை அழகுறச் சொல்கிறார். குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய், எப்படி வளர்ச்சியையும், வலியையும் உணர்கிறாள் என்பதையும், அவள் எப்படிப்பட்ட உணவுகளை உண்ண வேண்டும் என்பதையும் விரிவாக உரைக்கிறார். "மனித இருதயம் ஒருநாளைக்கு சுமார் ஒரு லட்சம் முறை துடிக்கிறது" "நமது நுரையீரல் சுமார் 10 ஆயிரம் லிட்டர் காற்றைச் சுவாசிக்கிறது" என்பன போன்ற அறிவியல்பூர்வமான அரிய செய்திகளை நமக்கு அறியத் தருகிறார். மொத்தத்தில், நோயில்லாமல் சிறப்பாக வாழ்வதற்கான வழிமுறைகளைக் கூறும் நூல்.
டாக்டா். கமலிஸ்ரீபால்
டாக்டர். கமலி ஸ்ரீபால் மறைந்த முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர். எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு பிறகு முதுமைக் கால சத்துணவு ஆய்வில் பிஎச்.டி. பட்டம் பெற்றவர். கவுன்சில் ஆப் மெடிக்கல் அண்ட் பிராக்டிசெஸ் தலைவராக இருப்பவர். பேமிலி பிளானிங் அசோசியேசன் துணைத்தலைவராக இருப்பவர். உமன் இந்தியன் அசோசியேசன் துணைத்தலைவர். கோகுலம் கதிர் மாத இதழின் ஆசிரியர். தமிழ், ஆங்கில இதழ்களில் மருத்துவ மற்றும் பெண்கள் முன்னேற்ற கட்டுரைகள் எழுதி வருபவர். இவரது பல முந்தைய புத்தகங்களில் காக்கை குருவி எங்கள் சாதி மனிதநேயம் பூந்தோட்டத்தில் ஆகியவை சிறந்த வரவேற்பை பெற்றன. வானொலி, தொலைக்காட்சிகளில் மருத்துவ சொற்பொழிவுகள் ஆற்றுபவர். மருத்துவ முகாம்களையும், மருத்துவ விழிப்புணர்வு முகாம்களையும் நடத்தி வருபவர். இவரது சேவைக்காக எண்ணற்ற விருதுகளை பெற்றவர்.
Be the first to rate this book.