இந்நூலில் மூன்று மருத்துவர்களின் வரலாறு எழுதப்பட்டுள்ளது. தந்தை மற்றும் இரு தனையர்கள், அம்மூன்று மருத்துவர்களும் மருத்துவத் துறையில் சேவையாற்றி புதுமைகள் செய்தார்கள்.
தங்களின் சுகத்தையும், நலனையும் துறந்து தொண்டாற்றினார்கள். தாங்கள் சேர்த்த செல்வங்கள் அனைத்தையும் செலவு செய்து மருத்துவமணைகளாக மாற்றி அவற்றில் பணியாற்றினார்கள்.
அம்மூவரைப் பற்றி ஹெலன் கிலேப்ப சேட்டில் என்பவர் எழுதிய “தி டாக்டர்ஸ் மையோ” என்ற ஆங்கில நூலை அப்துற் - றஹீம் அவர்கள் சிறந்த முறையில் தமிழாக்கம் செய்து “மருத்துவ மன்னர்கள்” என்ற தலைப்பில் 1955 ஆம் ஆண்டு தமது யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் மூலம் வெளியிட்டார்கள்.
1955 க்குப் பிறகு வெளிவராமல் இருந்த அந்நூலைத் தாங்களும் படித்து பயன் பெற வேண்டும் என்ற நன்நோக்கில் மறுபதிப்பாக தற்போது வெளியிட்டுள்ளோம்.
Be the first to rate this book.