வா.மு.கோமு என்ற பெயரில் எழுதிவரும் கோமகன் ஈரோடு மாவட்டத்தில் வாய்ப்பாடி என்கிற குக்கிராமத்தில் 1969ல் பிறந்தவர், பேசப்பட்ட பல நாவல்களையும் சிறுகதை 'தொகுப்புகளையும் முன்னதாக வெளியிட்டவர். 'குழந்தைகள் இலக்கியத்தில் சென்ற ஆண்டு டுர்டுரா என்கிற குறுநாவல் மூலமாக காலடி வைத்தவர், தொடர்ந்து சிறார்களுக்காக 'படைப்புகள் எழுதும் ஆர்வத்தில் இருக்கிறார்,மருதபுரி நாட்டில் திடீரென ராட்சத காளான்கள் 'மழைக்காலத்தில் புடைக்கத் துவங்குகின்றன. ஏன்? என்ற கேள்வியில் ஆரம்பிக்கும் இந்தக் கதைமாய தந்திரங்கள் நிரம்பிய கதையாக மாறி விடுகிறது. உள்ளே தமிழின் சொல்கதைகளின்வடிவிலும் சிறார்களுக்காக மாயங்களை 'சொல்கிறார் ஆசிரியர். மந்திரவாதிகள் , 'என்றறியப்பட்ட அனைவரும் இவ்வுலகில் துஷ்டர்களாய்த் தான் இருந்து மடிந்திருக்கிறார்கள் 'என்பதை மீண்டும் சொல்ல வரும் கதை.
5 குழந்தைகளுக்கு கட்டாயம் வாங்கி கொடுக்கவும்...
குழந்தைகளுக்கான புத்தகம் படிக்கும் ஆர்வத்தை தூண்டும்படியான சிறிய மாயாஜால கதை .
P JOTHIMUTHU 06-11-2022 02:38 pm