கவிஞர் மு. பாஸ்கரன் அவர்கள் தற்போது அவர் படித்து வளர்ந்த பழமை: வாய்ந்த பூர்வீசு கீழத்தஞ்சையில் மயிலாடுதுறையில் டாக்டர் குருநகரில் துணைவியாருடன் வாசித்துவருகிறார். தமிழ் இலக்கியங்கள் மற்றும் கவிதைகள் மீதான அவருடைய ஆர்வமென்பது அவரின் சிறு வயதில், தனது. சொந்த கிராமமான காழிநகர் - வடகாலில், குருகுல கல்வி காலங்களில் தமிழ் பயின்ற தனது தாத்தா நடேசன், தனது தந்தை முருகேசன் அவர்களால் விதைக்கப்பட்டது. இவர் பள்ளி கால பாடநோட்டுகளில் எழுதத் துவங்கி, தற்போது முகநூலில், 'கவிநேசன் பாஸ்கர் ஜோதி' என்ற புனைப்பெயரில் தனது படைப்புகளைத் தினமும் எழுதிக்கொண்டிருக்கிறார். இவரது படைப்புகள் அவரைச் சுற்றியிருந்தவர்களைச் சார்ந்தும், சமூகம் சார்ந்ததுமாகவே இருந்துவந்துள்ளது. இத்தகைய ருசிகரம் மிகுந்த படைப்புகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பே இந்த 'மறுதாம்புக் கவிதைகள்!. இது இவரின் இரண்டாவது கவிதை நூலாகும். இவரது முதல் கவிதைத் தொகுப்பான சீமாளியும் கை வாளும்' நண்பர்களின் ஏகோபித்த வரவேற்போடு 2020ஆம் ஆண்டு வெளி வந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
Be the first to rate this book.