ஸர்மிளா ஸெய்யித்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் முதல் தொகுப்பு இது.
புனைவுப் பிரதிகளையும் அ-புனைவுப் பிரதிகளையும் முனைப்புடன் எழுதிக்கொண்டிருக்கும் ஸர்மிளா ஸெய்யித் முப்பதாண்டு கால ஈழப் போருக்குப் பின்னான காலத்தில், இலங்கையின் இனத்துவப் பிரச்சினைகளை மையமாக வைத்து எழுதிய கட்டுரைகளை இந்தத் தொகுப்புக் கொண்டுள்ளது.
வலுவான காற்றடிக்கும் பக்கமாகச் சாயும் எழுத்துச் சந்தர்ப்பவாதியல்லாமல் அரசாலும் உப ஆயுதக்குழுக்களாலும் மதநிறுவனங்களாலும் கடுமையாகக் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் பல்வேறு எதிர்ப்புகளையும் புறக்கணிப்புகளையும் எதிர்கொண்டபடி ஈழ நிலத்தில் இருந்துகொண்டு ஒளிவுமறைவின்றி எழுதிய கட்டுரைகள் இவை.
Be the first to rate this book.