தற்போதைய தலைமுறையினரின் ஓர் அங்கமாக குதித்துவிட்டு ஆட்சி செய்கிறது நவீன உணவுமுறை. சுவைக்காகவும் மணத்துக்காகவும் விரும்பு உண்ணக்கூடிய - அவசர அடியில் சமைத்த உணவுகள், 2 மினிட்ஸ் உணவுகள் என சிறுவர்களையும் கவர்ந்திழுத்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் உணவு குறித்த விழிப்பு உணர்வு மக்களிடையே இப்போது பெருகிவருவது வரவேற்கத்தக்கது.
ஃபாஸ்ட் புட், சாக்ரீம், கலர் மற்றும் பதப்படுத்தப்பட்ட மற்றும் இறுக்கமான உணவுகளை உண்டுவந்த மக்கள், அவைகளால் ஏற்பட்ட பின்விளைவுகளை உணர்ந்து இப்போது பாரம்பர்ய உணவுகளைத் தேடியும், ஃபிரஷ்ஆன பழங்கள் மற்றும் காய்கறி, கீரை உணவுகளை நாடியும் வருகின்றனர். பின்விளைவுகள் அற்ற நலமுள்ள உணவுகளை தேர்வுசெய்து குழந்தைகளுக்குக் கொடுக்கும் பொறுப்பு பெற்றோரைச் சார்ந்தது. அதோடு முதியோரையும் குழந்தையாகவே எண்ணி அனுசரித்து, அவர்களுக்கும் எளிமையான பாதுகாப்பான உணவுடன் பராமரிப்பதும் அதே பெற்றோர்களையே தான் சார்ந்தது. அந்த வகையில் முதியவர்களுக்கான உணவு, குழந்தைகளுக்கான உணவு, அன்னையருக்கான உணவு, தாம்பத்திய நல்வாழ்வுக்கான உணவு என அந்தந்த வயதுடையவர்கள் உண்ண வேண்டிய சத்தான உணவுகளைப் பகுத்து கொடுத்திருக்கிறது இந்த நூல்.
மட்டுமன்றி பனி மற்றும் மழைக்காலம் என காலநிலைகள் மாறுபடும்போது உணவு முறையிலும் மாற்றம் வேண்டும் என அறிவுறுத்துவதோடு, ஒன்பது வகை அறிவை ஊட்டும் கல்வி தரும் உணவு குறித்தும், அறுசுவை உணவின் முக்கியத்துவத்தையும் விரிவாக விளக்கியிருக்கிறது. காய்கறிகள், பழங்களின் சத்துக்களை கூறுவதோடு சிறுதானியங்களின் மகத்துவத்தையும் அவற்றின் சிலவகை செய்முறைகளின் பதத்தையும் கூறுகிறது. திரிதோட சம பொருட்கள் என்று நம் முன்னோர்களால் அழைக்கப்பட்ட ஏலம், சுக்கு, வெந்தயம், பூண்டு, மஞ்சள், மிளகு, சீரகம், பெருங்காயம் எனும் அந்த எட்டு பொருட்களும் அந்தக் கால தாளிப்புப் பொருட்களாக பயன்படுத்தப்பட்டது. சமைக்கும்போது, உணவின் திரிதோட சமநிலைத் தன்மை மாறிவிடக்கூடாது என்ற அக்கறை அதிகமாக இருந்துள்ளது. அவற்றின் முக்கியத்துவத்தையும் பயனையும் இன்றைய தலைமுறைக்கு நினைப்பூட்டுகிறது இந்த நூல். இந்த நூலை வாசிக்கும் இன்றைய தலைமுறையினரின் உணவுமுறைகள் இனி சிறப்பானதாக மாறும் என்பதில் சந்தேகமேயில்லை.
Be the first to rate this book.