மனிதன் நன்மையையும், தீமையையும், நீதியையும், அநியாயத்தையும் புரிந்து கொள்கிறான். இது மனித இயற்கை. அந்த நன்மைக்கு நன்மையும், தீமைக்கு தண்டனையும், அநியாயத்திற்குக் கூலியும் கிடைக்க வேண்டும் என்று அவன் ஆழ்ந்து விரும்புகின்றான்.
தீமை வாழ்வதை, நன்மை ஒடுங்கிப் போவதை, நீதி பின் தள்ளப்படுவதை, அநியாயம் கோலோச்சுவதை அவனால் சகிக்க முடிவதில்லை.
எனினும் இந்தப் பூமியில் நன்மையையும், தீமையும் அநியாயமும் அவற்றிற்கான கூலியைப் பெறுவதில்லை. பல சந்தர்ப்பங்களில் தீமை மாலை போட்டு வரவேற்கப்படுகிறது. அநியாயம் சிம்மாசனமேறி ஆள்கிறது.
இதுதான் முடிவா?! தீமையும் அநியாயமும் அவற்றிற்கான தண்டனைகளைப் பெற மாட்டாவா?!
நன்மையும் நீதியும் அவற்றிற்கான வெகுமதிகளைப் பெற முடியாது போய்விடுமா?!
மனித உள்ளத்தின் ஆழ்ந்த அங்கலாய்ப்பு இது.
Be the first to rate this book.