இந்த நாவலில் இறப்பு, தொடர்ச்சியான நிகழ்வாகவுள்ளது. மரணத்தில் தொடங்கி மரணத்தில் முடிகிற வடிவம் எதேச்சையாக அமைந்ததுதான். உண்மையில் மரணத்தை எழுத வேண்டுமென்ற எண்ணம் என்னிடமில்லை. எளிமையான வாழ்வை, காதலை, அன்றாடப் பாடுகளைச் சந்திக்கும் எனது கிராமத்து மனிதர்களைப் பதிவு செய்யவேண்டுமென்று விரும்பினேன். முதலில் செல்வி - வைரமணி காதலிலிருந்து தொடங்கவேண்டுமென ஒரு அத்தியாயத்தையும் எழுதி முடித்தேன். அந்த அத்தியாயம் நாவலின் முதலில் வரவேண்டுமென நினைத்தேன். நாவலில் வரும் கதாபாத்திரங்கள் நாவலாசிரியன் நினைப்பதைச் செய்யவிடாமல் தடுத்துவிடுவார்கள் என்பதைத் திரும்பவும் இரண்டாவது தடவையாக எழுதும்போது உணர்ந்துகொள்ள முடிந்தது.
Be the first to rate this book.