பெரிய மருதுவை காட்டு ராஜா என்று சொல்லலாம். பாய்ந்துவரும் புலியைக்கூட அநாயசமாக அடக்கி ஆளும் வீரம். அவர் குறி வைத்து விட்டால் விலங்குகள் தப்பிப்பது கடினம். எதிரிகள் கூட!
சின்ன மருதுவும் வீரத்தில் சளைத்தவரல்ல. கூடவே நாடாளும் கலை அறிந்தவர். அரசியல் சூசகங்கள் தெரிந்தவர். அசாதாரணமான சூழ்நிலைகளைச் சமாளிக்கும் வித்தை தெரிந்தவர். அந்நியர்கள் ஆக்கிரமித்திருந்த சிவகங்கையைப் போரிட்டு மீட்டு, அங்கு வேலு நாச்சியாரை அரியணையில் உட்கார வைத்தவர்கள் மருது சகோதரர்கள்தான்.
,br>மண்ணுக்காக, மக்களுக்காக, சுதந்தரத்துக்காக, வாழ்வின் பெரும் பகுதியைப் போர்க்களத்திலேயே கழித்த மருது சகோதரர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் வரலாறு, உணர்வுபூர்வமான மொழி நடையில்.
Be the first to rate this book.