இந்நூலைப்பற்றி உலக நாயகன் கமல் ஹாசன்...
“ஒரு சுவாரசியமான மர்ம நாவலைப் படிப்பது போல இந்த நூலை வாசிக்க முடியும். சொந்த விருப்பு வெறுப்புகளைக் கலக்காமல், முழுக்க முழுக்க வரலாற்று ஆதாரங்களைப் பின்னணியாகக் கொண்டு இந் நூல் எழுதப்பட்டுள்ளது.”
“மருதநாயகத்தின் வாழ்க்கைச் சரிதத்தை அனைவரும் வாசித்தறியும் வகையில், நேர்கோட்டுச் சித்திரமாகத் தந்து இருக்கும் அமுதனின் உழைப்பும், தீவிரமும் போற்றுதற்குரியது.”
“பிரிட்டிஷாருக்கு எதிராக முதல் சுதந்திரப் போரை நிகழ்த்திக் காட்டிய மருதநாயகத்திற்கு தமிழ்நாட்டில் மணிமண்டபமோ நினைவிடமோ கூட. இல்லை. இறுதிப்போரில் மருதநாயகம் வென்றிருந்தால் இந்திய வரலாறு மட்டுமல்ல இங்கிலாந்தின் வரலாறுமே மாற்றி எழுதப்பட்டிருக்கும்.”
“இந்த நூலை வாசிப்பதென்பது பதினெட்டாம் நூற்றாண்டின் தமிழக வரலாற்றை வாசிப்பதும் கூட.”
“இந்த நூல் மூலம் மீண்டும் ஒரு முறை கான்சாகிப்புடன் வாழும் வாய்ப்பினை நமக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறார் அமுதன்.”
Be the first to rate this book.