பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்கள், தங்கள் பண்ணைகளில் வேலை செய்வதற்காக ஆப்பிரிக்காவிலிருந்து கறுப்பு இன மக்களை அமெரிக்காவுக்கு அடிமைகளாகத் தருவித்தனர். காலப்போக்கில் ஐரோப்பிய _ கறுப்பு இனங்களில் கலப்பு இனமும் உண்டாயிற்று. ஆனாலும் கலப்பு இனமும் கறுப்பு இனத்தவராகவே கருதப்பட்டனர். ஐரோப்பியர்கள் தங்களுக்கே அளித்துக் கொண்ட முன்னுரிமை, கௌரவம், சலுகை ஆகியவற்றை கறுப்பு இனத்தவர்களுக்கு அளிக்கவில்லை. பேருந்துகளில் ஐரோப்பியர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அது காலியாகவே இருந்தாலும் கறுப்பு இனத்தவர் அமர முடியாது. உணவு விடுதிகளில் சரி சமமாக அமர்ந்து உணவு உண்ண முடியாது. இது ஓர் உதாரணம்தான். இதுபோல எத்தனையோ கொடுமைகள். கறுப்பு இன மக்களை இந்தக் கொடுமைகளிலிருந்து மீட்க விடிவெள்ளியாக உதித்த கறுப்பு இனத்தவர்தான் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர். தன் வாழ்நாள் முழுவதும் கறுப்பு இன மக்களின் உரிமைக்காக அகிம்சை வழியில் அயராது பாடுபட்டவர். மகாத்மா காந்தியை நேசித்த மனித நேயர்.
Be the first to rate this book.