அவமானங்கள், அச்சுறுத்தல்கள், குண்டு வீச்சு, கொலை முயற்சி எல்லாவற்றுக்கும் எதிராக ஒரே ஆயுதம், அஹிம்ஸை.
ஆஹிம்ஸைதான் காந்தியின் ஆயுதம். அதுவே மார்ட்டின் லூதர்கிங்கின் ஆயுதம். கருப்பு -வெள்ளை, இதுதான் பிரச்னை. எங்களை ஏன் இப்படி நிறத்தால் பிரித்துப்பார்க்கிறீகள். நாங்களும் உங்களைப்போன்ற மனிதர்கள்தானே -இதுதான் மார்ட்டின் லூதர் கிங்கின் வழ்நாள் கேள்வியாக இருந்தது. வெள்ளையர்களுக்குத் தனிப் பள்ளிக்கூடம். கறுப்பின மக்களுக்குத் தனிப்பள்ளிக்கூடம். குழந்தைகள் விளையாடும் இடம் கூடத்தனித்தனி. உடல் ரீதியாக மட்டுமல்லாமல், உணர்வு ரீதியாகவும் கறுப்பினத்தவர்கள் மிருகத்தனமாக ஒடுக்கப்பட்டார்கள். இனவெறிக் கொடுமைகளைத் தீர்ப்பதற்காகப் பாடுபட்டதற்கு மார்ட்டின் லூதர் கிங்குக்கு நோபல் பரிசு கிடைத்தது. அதே இனவெறிதான் அவருக்கு இன்னொரு பரிசும் கொடுத்தது. ஆம்,அவர் கொலை செய்யப்பட்டார்.
- பாலு சத்யா.
Be the first to rate this book.