"பலஸ்தீனம் இன்றும் பற்றியெரியும் நெருப்பாகவே உள்ளது. காஸா பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. உலகத்தின் கண்களுக்கு அந்த நெருப்பு வெளிச்சமாகத் தெரியாதபடி மூடப்பட்டுள்ளது. இது வெறும் காஸா அல்லது பலஸ்தீனம் சந்திக்கும் பிரச்சனையல்ல. ஒடுக்கப்படும் மக்கள் சந்திக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும் இதுவே நிலை.
உலகத்தில் ஆதிக்கச் சக்திகளால் ஒடுக்கப்படும் மக்களைப் பட்டியலிட வேண்டுமென்றால், உலகிலுள்ள எல்லா மக்களையும் பட்டியலில் சேர்க்க வேண்டும். ஒடுக்குமுறைக்கு எல்லைக் கோடுகள் இல்லை. அதன் இராட்சதக் கரங்கள் எல்லாவற்றையும் அழித்துவிட்டு உட்செல்கின்றன. அங்கு “ஆக்கிரமிப்பு இஸ்ரேல்-பலஸ்தீனப் பிரச்சனை” என்றால், இங்கு “பார்ப்பனிய இந்தியா-காஷ்மீர் பிரச்சனை”. இப்படி எடுத்துக்காட்டுகள் ஆயிரமாயிரம்.
நிலத்திற்கு நிலம் ஒடுக்குமுறையின் வடிவம் மாறலாம் ஆனால் ஒடுக்குமுறை ஒன்றே. ஆதிக்கச் சக்திகளின் கரங்கள் எல்லைகள் தாண்டுவதைக் காட்டிலும், ஒடுக்குமுறையைச் சந்திக்கும், அதற்கு எதிராகப் போராடும் மக்கள் அனைவரும் சாதி, மதம், மொழி, இனம், நாடு ஆகிய எல்லைகளைக் தாண்டி, தங்களது கைகளை கோர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒடுக்கப்பட்டோரின் ஒற்றுமையே விடுதலைக்கான பெரும் பாதை. அந்தப் பாதை உலகம் முழுவதும் செல்ல வேண்டும்.
இந்த அடிப்படையில் எழுத்தாளர் அ.சி. விஜிதரன் தொகுத்து மொழியாக்கம் செய்த ‘மரித்தோர் பாடல்கள்’ என்ற நூலை சிந்தன் புக்ஸ் காஸா மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக வெளியிடுகின்றது.
Be the first to rate this book.