படைப்புக்காலம் தொட்டு தற்கால மனிதன் வரை, மத நம்பிக்கையற்றவராக இருந்தாலும் இஸ்லாமியாராகவோ, கிறித்துவராகவோ, வேறு எந்த மதத்தினராகவோ, எந்த தலைமுறையைச் சேர்ந்தவராகவோ, யாராக இருந்தலும் சரி மார்க்கோ போலோவைப்போல பலத்தரப்பட்ட, இவ்வளவு உயர்ந்த விசயங்களை ஒருபோதும் பார்த்திருக்கவும் மாட்டார்; கேள்விப்பட்டிருக்கவோ மாட்டார். இதனை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். தான் கண்டவற்றை கேள்விப்பட்டவற்றையும் அவற்றைப் பார்க்கக்கூடிய வாய்ப்பில்லாத மக்களின் நன்மைக்காக இப்படியொரு புத்தகம் மூலம் தெரியப்படுத்த வேண்டும் என்கிற எண்ணங்களை ரகசியமாக வைத்திருந்து. 1298 ஆம் ஆண்டு ஜெனோவா சிறையில் இருந்தபோது சககைதியான பைசா நகரைச் சேர்ந்த ரஸ்ட்டிசெல்லோ என்பவரைக் கொண்டு எழுதச் செய்தார் மார்க்கோ போலோ.
நூலிலிருந்து...
“...மார்க்கோ போலோ, அவருடைய தந்தை நிக்கோலோ, தந்தையின் சகோதரர் மபேயோ மூவரும் அதிஅற்புதமான குப்லாய் கானின் அரசவையிலிருந்து இருபத்தாறு ஆண்டுகளுக்கு பிறகு வெனிஸ்-ல் இருந்த தம்முடைய பழைய வீட்டிற்குத் திரும்பினர். ஆடைகள் கிழிந்தி நைந்து தொங்கின; கன்றிக் கருத்த முகங்கள் நீண்ட நெடிய பயணத்தின் எல்லையற்ற இன்னல்களையும் இடர்ப்பாடுகளையும் தாக்குப்பிடித்து வந்து சேர்ந்திருப்பதைப் பறைசாற்றின. தாய்மொழியைக்கூட மறந்துபோய்விட்டனர். அவர்களுடைய தோற்றத்திலும் பேச்சிலும் அந்நியவாடை வீசியது; ஒட்டுமொத்த நடை உடை பாவனைகளிலும் தார்த்தாரிய முத்திரை அழுத்தமாக பதிந்திருந்தது. இருபத்தாறு ஆண்டு காலத்தில் வெனிசும்கூட மாறிபோயிருந்தது. அந்த பயணியருக்கு தமது இருப்பிடத்தைக் கண்டுபிடிப்பதே கடினமாய்ப் போயிற்று. ஒரு வழியாக வீடுதிரும்பிவிட்டனர்...”
Be the first to rate this book.