பிரபல வழக்கறிஞர் சங்கரலிங்கத்தின் மகன் கிஷோரைக் கரம் பிடித்து, ஏராளமான கனவுகளுடன் மண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் நாயகி யமுனா!
மணமான ஒன்றரை ஆண்டுக் காலத்தில், தனது மாமனாரின் வழக்கறிஞர் குழுவில் இடம்பெற்றிருக்கும் ஜீவானந்தனின் உதவியுடன், கணவனை போலீஸில் சிக்க வைக்கிறாள்.
தனித் தனித் தீவுகளாக மாறிக்கொண்டிருக்கும் இன்றைய இளைஞர்களின் மன விகாரங்கள் -அவை குடும்பத்திற்குள் விளைவிக்கக்கூடிய பிரளயங்கள் – யமுனாவின் கனவுகள் - அவை தடம் புரண்ட நிகழ்வுகள் – அவளுடைய படிப்படியான உணர்வுநிலை மாற்றங்களென, அவளுடைய நேர்மையான வாக்குமூலங்கள் வாயிலாக விரியும் எதார்த்தக் காட்சிகள்!
அவளுடைய கனவுகள் நியாயமானவையா?
கிஷோர் திருந்தினானா?
'மறப்பேன் என்றே நினைத்தாயோ!'என்று உணர்வுவழிப் பேசிக்கொள்ளும், ஜீவாவுக்கும் யமுனாவுக்கும் இடையில் நிலவும் உறவுநிலை தான் என்ன?
உணர்வுப்பூர்வமான வாசிப்பில் உரையாடியறியுங்கள்!
Be the first to rate this book.