யாதார்த்தத்தில் நடக்க முடியாத ஒரு காரியத்தை மானசீகமாக நடத்தி வைக்க, அல்லது நடந்ததாக நினைத்துக்கொள்ள மந்திரங்கள் பயன்படுகின்றன. இந்த மந்திரங்களே மாயச் செயல்களைச் செய்வதாகக் கற்பிதங்கள் செய்யப்படுகின்றன. மாயஜாலங்களை மனம் நம்புகிறது.நம்ப வேண்டும் என்று ஆசைப்படுகிறது. அயதார்த்தமும், மாயஎதார்த்தமும் குழந்தை மனதின் விளைவே. குழந்தைகளே மாயாஜாலங்களின் படைப்பாளிகளாக இருக்கிறார்கள். குழந்தைமையை இழந்து விடாத பெரியவர்களும் மாயாஜாலங்களின் வண்ணச் சிறகுகளைப் பூட்டி அவ்வப்போது தங்கள் குழந்தைமை வானில் பறந்து திரிகிறார்கள். குழந்தைகளும் குழந்தைகளாக இருப்பவர்களும் பாக்கியவான்கள்.
Be the first to rate this book.