கடவுளுக்கு நிகராகக் கணவனை வைத்து அவன் காலடியில் பணிந்து அவனுக்குத் தொண்டு செய்வதே பிறவிப் பயனென வளர்க்கப்பட்ட பெண்கள், தங்களுக்கான அடையாளத்தை நிலை நிறுத்தும் முயற்சியாக மரபுகளை மீறி மனிதத்தை நிலைநாட்டுவதில் கல்வியை ஆயுதமாகக் கையிலெடுத்துத் தன்மானம் தன்னிறைவுடன் வாழத் தன்னை தகுதிப்படுத்திக் கொள்ள விழைகிறார்கள். தங்களை நசுக்கி அடக்கி ஒடுக்கிய சமூக அமைப்பினை மாற்ற விழைகிறார்கள்.
ஆணுக்குள்ள அத்தனை உரிமைகளும் பெண்ணுக்கும் உள்ளன என்று நம்பும் இவர்கள் தங்களது நோக்கத்தைத் தெளிவாக எழுத்துக்களில் பதிவு செய்துள்ளனர். தங்களுக்கு கிடைத்த வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்தித் தங்கள் விடுதலையை நோக்கமாகக் கொண்டு புதினங்களைப் படைத்திருக்கும் இப்படைப்பாளிகளையும் அவர்களது படைப்புகளையும் நமக்கு அறிமுகம் செய்யும் விதமாக இந்நூல் அமைந்துள்ளது.
- பாமா
Be the first to rate this book.