கம்யூனிசமும் முதலாளித்துவமும் ஒன்றுக்கு ஒன்று எதிரானவை அல்ல. இரண்டுமே ஒரே பொருள்முதல்வாதச் சித்தாந்தம் மற்றும் சிந்தனையின் ஆதாரத்தில் அமைந்தவை. ஜனநாயகத்தின் ஆதரவு கொண்ட முதலாளித்துவத்துக்கும் சர்வாதிகாரத்தினால் நிலைபெற்றிருந்த கம்யூனிசத்துக்கும் இடையே ஏற்பட்ட போட்டியில், பிந்தையது தோல்வியுற்று வீழ்ந்தது. மார்க்சியம் முதலாளித்துவத்தை எதிர்த்ததே தவிர, அதற்கு மாற்றாக இல்லை. லெனின், ஸ்டாலின் சிலைகளைப் போல, மார்க்ஸும் ஒரு பழமைச் சின்னமாகவும் பயன் ஒழிந்துபோன மனிதராகவும் ஆகிவிட்டார். அதற்கு மார்க்ஸைவிட மார்க்சிஸ்டுகளே காரணம். முதலாளித்துவத்தின் அடிப்படை கட்டற்ற சந்தை. ஆனால் இது குடும்பம், சமூகம் போன்ற பொருளாதாரத்தை நெறிப்படுத்தும் சக்திகளை அழிக்க முற்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் புழக்கத்தில் இருக்கும் கட்டற்ற சந்தை வகைமாதிரி நம் இந்தியப் பொருளாதாரத்துக்கு அந்நியமான ஒன்று. இந்திய சமுதாயத்தோடு ஒத்துப்போகும், கட்டுப்பாடுகளுடன்கூடிய தனித்துவமான சந்தையே நமக்குத் தேவை. -- எஸ். குருமூர்த்தி, அரசியல், பொருளாதார விமரிசகர்.
Be the first to rate this book.