இந்த “மரகதப்புறா” அவரின் புதிய சிறுகதைத் தொகுப்பு. வாசிப்புப் பயிற்சிகளும் கவிதையாக்க அனுபவங்களும் இந்த சிறுகதைத் தொகுப்புக்கு அடித்தளம் அமைத்திருக்கின்றன.இந்த தொகுப்பில் எல்லாக் கதைகளும் தனித்தனி உள்ளடக்கத்தோடு வெளிச்சப்பரல் ஏந்தி ஒளிவீசுகின்றன. ஒன்று இன்னொன்று போல் இல்லை என்பது படைப்பியக்கத்தின் ஆத்மார்த்த வெளிப்பாடு. மேட்டுக்குடி மனிதர்களும் கீழ்க்குடிக்காரர்களும் சேர்ந்தே வாழ்கிறார்கள் என்பது நிஜம்; ஆனால் கௌரவச் சமத்துவம் இருக்கிறதா என்று ஒவ்வொரு வாசகரையும் கேட்க வைக்கிறது இந்தத் தொகுப்பு ஒரு மரத்தில், அல்ல, அல்ல, ஒரு மரக்கொப்பில் பதினைந்து பூக்கள் மலர்ந்திருக்கின்றன. வாசிக்கவும் சுவாசிக்கவும் இதமாய் இருக்கிறது. முதல் தொகுப்பு என நம்பமுடியாத அளவுக்கு வேகமானதாகவும் விவேகமானதாகவும் திகழ்கிறது. எழுத்தாளர் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறார் என இந்தத் தொகுப்புப் பிரகடனம் செய்கிறது.
Be the first to rate this book.