உயிரினங்களின் இயக்கத் திறனுக்கு காரணமாக இருக்கும் மரபணு குறித்து இந்நூல் பேசுகிறது. மரபணு ஆராய்ச்சி நடைபெற்றது எப்போது? அதைக் கண்டறிந்தது யார்? என்பன போன்ற பல சுவாரசியமான தகவல்கள் நூல் முழுவதும் பரவிக் கிடக்கின்றன.
மரபணுவின் அமைப்பு, குரோமோசோமின் அமைப்பு, புரத உற்பத்தி, மரபணு மாற்றத்தால் ஏற்படும் நன்மைகளும், தீமைகளும் என பல தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. மருத்துவத்துறையில் மரபணு ஆராய்ச்சி எந்த அளவுக்கு உதவும் என்பது குறித்து இந்நூலின் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடியும். நூலின் கடைசிப் பக்கங்களில் மரபணு தொடர்பான சில ஆங்கில வார்த்தைகளுக்கு நிகரான தமிழ்சொற்கள் அடங்கிய கலைச்சொற்கள் பகுதியைச் சேர்த்திருப்பது சிறப்பு.
அறிவியல் சம்பந்தமாக தமிழில் வெளிவந்திருக்கும் இந்தப் புத்தகம் மாணவர்களுக்கும், மரபணு குறித்து மேலும் ஆழமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புபவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். அறிவியலும், கணிதமும் மாணவர்களுக்கு கசக்கும் பாடங்களாக அமைந்துவிடும் சூழலில், இதுபோன்ற எளிமையான அழகு தமிழில் அறிவியல் நூல்கள் அதிக எண்ணிக்கையில் வெளிவர வேண்டும்.
Be the first to rate this book.