கனவுகளுடன் அமீரகம் வரும் பல பெண்களை பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன். வீட்டு வேலை, ஓட்டுனர் வேலை, அழகு நிலைய வேலை என்று கிடைத்த வேலைகளைச் செய்து தனிமையே துணையாக தன் குடும்பத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கும் அனைத்து பெண்களுக்கும் இம்மராம்பு சமர்ப்பணம். - நசீமா ரசாக் கடல் கடந்து செல்லும் ஆண்களின் பாடுகளை விட தன் குடும்பத்திற்காக மொழி தெரியாமல், நிலம் பற்றிய அடிப்படைத் தகவல்கள் எதையும் அறியாமல், துணை இல்லாமல் துணிந்து பொருளாதாரச் சுமைகளுக்காக அமீரகம் வரும் பெண்கள் எதிர்கொள்ளும் பாதை சவால்கள் நிறைந்தது. எல்லாவற்றையும் சகித்தபடி அயல்தேசத்தின் பிரம்மாண்டங்களுக்குள் தங்களைப் பொருத்திக்கொள்ளும் சில பெண்களின் கதைகள் ஒன்றொடொன்று ஊடாடுகிறது.
Be the first to rate this book.