* சிறந்த கவிதை நூல் - 2017 @ தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - அசோகமித்திரன் நினைவு படைப்பூக்க விருது
குளத்தில் தழும்பும் தாமரையைக் கவனமாக விட்டுவிட்டு நன்செய் வழியோர நெருஞ்சி மலர்களைச் சேகரிக்கும் ஒரு நிலப் பித்தனின் மனநிலை வாய்த்திருக்கிறது ஷக்தியின் இந்தக் கவிதைகளுக்கு. தன் வழ்நிலம் மீதான கவனிப்பை சொற்களாக, படிமங்களாக, காட்சிகளாக விவரிக்கிறார் எனச் சொல்வேன் எனில் அதுவே உண்மை. நிலத்தைக் கிளறி அதன் ஆழத்துக்குள் இயங்கும் மண்புழுக்களை மேலே கொண்டுவரும் ஏர்கொழுமுனை போல இயங்குகின்றன இவரது சொற்கள். அடர்ந்த மொழியில் எழுதப்பட்டிருக்கும் இந்தக் கவிதைகள், சொற்கோர்வையாக இல்லாமல் வாழ்ந்த வாழ்வின் அடையாளச் சித்திரமாக இருப்பதும், நிகழ்கால மனக் கொந்தளிப்பின் ஊசலாட்டமாக இருப்பதும் ஷக்தியின் கவிதைகளுக்கான பலம்.
- கதிர்பாரதி
Be the first to rate this book.