‘மகாஸிதுஷ் ஷரீஆ: அறிமுகக் கையேடு’ என்ற பெயர் தாங்கி வரும் இந்த நூல், அறபுமொழியில் வெளிவந்த ‘மகாஸிதுஷ் ஷரீஆ தலீலுன் லில் முப்ததிஈன்’ என்ற நூலின் மொழிபெயர்ப்பாகும். அடிப்படையில் இந்த நூல் ஆங்கில மொழியிலேயே எழுதப்பட்டது.
'Maqashid Al Shariah A Beginners Guide’ என்ற பெயரில் கலாநிதி ஜாஸிர் அவ்தா அவர்கள் எழுதி, இஸ்லாமிய சிந்தனைக்கான சர்வதேச நிறுவனம் (IIIT) வெளியிட்டு வைத்தது. கலாநிதி அப்துல் லதீப் கய்யாத் அவர்களால் அறபுமொழியில் பெயர்க்கப்பட்டு, இஸ்லாமிய சிந்தனைக்கான சர்வதேச நிறுவனத்தின் ஊடாகவே அதன் அறபுப் பிரதியும் வெளியிடப்பட்டது. மூல நூலின் சொந்தக்காரர் கலாநிதி ஜாஸிர் அவ்தா அவர்கள், இன்றைய சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர். மகாஸித் கலைகளில் ஆழ்ந்த புலமை கொண்டவர். நவீன மாற்றங்களுக்கு ஏற்ப இஸ்லாமிய சிந்தனையை வியாக்கியானப்படுத்தும் ஆற்றல் கொண்டவர். தமிழ் பேசும் வாசகர்கள் கலாநிதி ஜாஸிர் அவ்தா அவர்களை ஓரளவுக்கு அறிந்திருக்கிறார்கள். அந்தவகையில் அவரது சிந்தனைகள் குறித்த அறிமுகத்தை மேலும் விசாலப்படுத்திக் கொள்வதற்கு இந்த நூல் துணை செய்யும் என நினைக்கிறேன்.
- மொழிபெயர்ப்பாளர் குறிப்பிலிருந்து
Be the first to rate this book.