கதைகளைச் சோற்றுருண்டைகள் போலக் குழந்தைகளுக்கு ஊட்டிய தாத்தாவின் வம்ச சரித்திரமாக நாவல் விரிவு கொள்கிறது. துளசியப்பனின் தாத்தா கதை இது. ஒரு வம்ச வரலாறாகவே இந்நாவல் எழுதப்பட்டிருந்தாலும், சாதிய இழிவுக்கெதிரான ஒரு பண்பாட்டு அடையாளப் போராட்டத்தின் கதை இதற்குள்ளே அடங்கியிருப்பதை நம்மால் கண்டுணர முடிகிறது.
பதனி இறக்கிக் கருப்பட்டி காய்ச்சிக் காசு சேர்த்து நிலம் வாங்கிக் காரை வீடு கட்ட வேண்டும் என்கிற கருப்பாயியின் கனவும் சோலைமலையின் வேகத்துக்கு கூடுதலான விசை தருகிறது. நாட்டின் வரலாறும் குடும்ப வரலாறும் சந்திக்கிற புள்ளிகளே நம் சமூக வரலாறாகும் என்பதால் இதுபோன்ற நாவல்களை இனவரைவியல் தளத்தில் வைத்து நாம் வாசிக்க வேண்டியிருக்கிறது.
Be the first to rate this book.