“மானுடத்திற்கு உரியதெதுவும் எனக்கு அந்நியமானதல்ல” என்பது மார்க்ஸிற்கு பிடித்தமான ”சொலவடை”. ஆம் இலக்கியம், இசை, வரலாறு, மொழி, கலை எதுவும் மார்க்ஸிற்கும் அந்நியமானதல்ல; மார்க்ஸியர்களுக்கும் அந்நியமானதல்ல!
2019ஆம் ஆண்டில், சுதன்வா தேஷ்பாண்டே, மொலாயாஸ்ரீ ஹஷ்மி ஆகியோரோடு நானும் அய்ஜாஸ் அஹ்மதுவுடன் சில நாட்கள் கழிக்க பயணம் செய்தோம். அவரது வாழ்க்கை மற்றும் பணியைப் பற்றி இந்த நீண்ட நேர்காணலை அந்த நாட்களில்
நடத்தி, பல ஆண்டுகளாக அவர் எழுதிய கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் பற்றியும் கேட்டுத் தெரிந்து கொண்டோம்.
அவர் தனது நேரத்தையும் ஞானத்தையும் தாராள மனதுடன் எங்களுடன் பகிர்ந்துகொண்டார். கடந்த காலத்தைப் பற்றிய தனது கருத்துகளையும், வரலாற்றை முன்னோக்கிச் செலுத்தும் முரண்பாடுகளையும் விளக்கி நம் மனதையும் இதயத்தையும் நிரப்பினார். இந்தப் புத்தகம் அந்த நீண்ட நேர்காணலைக் கொண்டிருக்கிறது. செம்மைப்படுத்தப்பட்டது என்பதைத் தனியே
சொல்ல வேண்டியதில்லை.
நேர்காணலை ஷ்ரேயோஷி பந்தியோபாத்யாய் அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் எழுத்து வடிவத்திற்கு மாற்றிக் கொடுத்தார். அட்டை வடிவமைப்பை கியூபாவைச் சேர்ந்த கிரேட்டா அகோஸ்டா ரெய்ஸ் செய்து கொடுத்தார். அய்ஜாஸ் அஹ்மத் முன்வைக்கும் கோட்பாட்டின் விரிவான, சர்வதேசிய உணர்வை அவரது வடிவமைப்பு மிகச்சரியாகப் வெளிப்படுத்தி இருக்கிறது. அற்புதமான சில நாட்கள் அவை. இந்தப் பிரசுரத்தில் அந்த அற்புதத்தில் ஓரளவு வெளிப்படும் என்று நம்புகிறோம்.
Be the first to rate this book.