குழந்தைகளின் உலகம் வினாக்களால் நிரம்பியிருக்கின்றது. தர்க்கங்களுக்குள் அடங்காத மதிப்புமிக்க அவ்வினாக்கள் இளமைப் பருவத்தின் அறிதலை வளமாக்குகின்றன. ஆப்பிள்கள் ஏன் பேரிக்காய்களைப் போல் இல்லை, பேரிக்காய்கள் ஏன் ஆப்பிள்களைப் போல் சுவைப்பதில்லை? பனியையும் வெப்பத்தையும் கடுமழையையும் ஏன் எல்லாச் செடிகளும் தாங்குவதில்லை. கோடையையும் கடுங்குளிரையும் ஒருசேரத் தாங்கும் செடிகளை உண்டாக்கும் மந்திரவாதிகள் இருக்கிறார்களா? யார் அவர்கள் ? இயற்கை கொண்டிருக்கும் ஒப்பற்ற ஆற்றல்தான் இதைச் செய்கிறதா? இந்தக் கதையில் மிச்சூரின் எனும் கண்டுபிடிப்பாளர் இருக்கிறார். சோவியத் நாட்டில் வேளாண்மை சார்ந்த கண்டுபிடிப்புகள் எவ்வாறு நிகழ்ந்தன என்பதைக் குழந்தைகளுக்குச் சொல்லும் இந்த மந்திரப் பழத்தோட்டம், அவர்களின் எல்லையற்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கக் கூடும்.
Be the first to rate this book.