தொன்மத்தின் சடங்கு மொழியில் நவீன விஞ்ஞானத்தின் சூட்சுமங்களை நேசமித்ரன் கவிதையாக்குகிறார். அவரது மொழி வேட்கையும் உயிரினங்களின் மீதான அதீத உற்று நோக்கலும் உயிரினங்களின் நடத்தைகளை கவிதை மொழியாக்குகின்றன. அதனால்தான் காதுகளே வௌவாலின் கண்களாக நமக்குத் தெரிகிறது. ஆகாயம் மற்றும் நிலத் தோற்றங்களின் மீது மொழி மண்புழுபோல் படிந்து ஊர்கிறது. இவரது கவிதைகளில் ஆப்பிரிக்கப் பழங்குடிகளின் புழுத்த நம்பிக்கைகள் மற்றும் அற எல்லைகள் கடந்த கார்ப்பரேட் யுகத்தின் வாழ்வுமுறைகள் சாட்சியமாகின்றன. கவிதை என்பது ஒரு தனித்த துறையல்ல. பல்வேறு துறை சார்ந்த வாசிப்பு அனுபவங்களிலிருந்து இவர் தமிழ் கவிதைகளுக்கான புதிய கலைச் சொற்களை உருவாக்குகிறார். அவ்வகையில் நேசமித்ரன் கவிதைகள் தமிழ் நவீன கவிதையின் விஸ்தரிப்பு.
- செல்மா பிரியதர்ஸன்
Be the first to rate this book.