சிறப்பு மிளிரும் இந்தப் படைப்பு,கன்னட இலக்கியத்தின் கலங்கரை விளக்கம் என்று போற்றப்படும் சிவராம காரந்த் எழுதிய மூன்று தலைமுறைகளின் கதை. ஒரு கடலோர கிராமத்தில், பரம்பரையாக வரும் வேளாண்மைக் குடும்பத்தில் நவீன நாகரிகம் குறுக்கிடுகிறது. மகன் நிலத்தை விட்டு நகரத்துக்குச் சென்று தொழில் செய்கிறார். ஆங்கிலக்கல்வி பெற்ற இரண்டாம் தலைமுறை, மண்ணுடன் தனக்குள்ள உறவுகளை இழக்கிறது. மூன்றாம் தலைமுறை இதனால் வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்கொள்கிறது. பெருநகரங்களுக்கு இடம் பெயர்ந்து சென்று வாழ்க்கை நடத்த முயல்கின்ற பேரனுக்கு இந்த வாழ்க்கை கசக்கின்றது.
Be the first to rate this book.