அப்படித்தான் காஷ்மீர் முதல் காஞ்சிபுரம் வரை 17 ஆண்டுகால பயணமாக அது உருவெடுத்தது. வெறும் சென்றோம், ஊர் சுற்றினோம் என்றில்லாமல் தான் கடந்து வந்த பாதையை முறையாகத் தொகுத்து ஆவணப்படுத்தி வரலாற்றில் தனக்கென தனித்துவமான இடம்பிடித்துச் சென்றார். இதுபோன்று வரலாற்று நெடுகிலும் அபாரமான பயணங்களை மேற்கொண்ட ஆளுமைகள் பலருண்டு. மனிதகுலத்தின் வளர்ச்சிக்கும், புதிய தேசங்கள், கண்டங்கள் கண்டறியப் பட்டதற்கும் வழிகோலியது பயணம். அத்தகைய பயணக் கதைகளின் தொகுப்பாக, ‘மண்ணுக்குள் அரண்மனையும் மரண ரயில் பாதையும்’ புத்தகத்தை தமிழ் திசை பதிப்பகம் வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்நூலின் ஆசிரியர் சூ.ம.ஜெயசீலன் தன்னந்தனியாக பயணம் செய்வதில் பேரார்வம் கொண்டவர். பயணங்களுக்கு இணையான ஈடுபாட்டை எழுத்திலும் கொண்டவர். கவிதைத் தொகுப்பு, கட்டுரை தொகுப்பு, மொழிபெயர்ப்பு கதைகள் என இதுவரை 25 நூல்களைத் தந்திருக்கும் இவரது பயணக் கட்டுரை தொகுப்பு நூல் இது.
Be the first to rate this book.