சேதுபதிகள் ஆண்ட மண்ணில் புதைந்த சேது சீமையின் மர்மங்களைத் தோண்டி எடுத்து கண்முன்னே காட்சிப்படுத்தும் நூல். பல கோயில்கள் மற்றும் ஆதீனங்களிலிருந்து கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள் வழியும் வரலாற்றில் புதைந்துள்ள சேது சீமையின் அறியப்படாத செய்திகளையும் ரகசியங்களையும் உலகுக்குச் சொல்கிறது இந்த நூல்.
சேதுபதிகளுக்கும் டச்சுக்காரர்களுக்கும் நல்ல வர்த்தக மற்றும் யுத்தத் தளவாட உறவு இருந்து வந்திருக்கிறது.1825-க்குப் பிறகு மறைந்துபோன டச்சுக்காரர்களின் நோவோ பகோடா நாணயம், சேதுபதிகள் ஆட்சிக் காலத்தில் நீண்ட காலம், மறவர் சீமையில் புழக்கத்தில் இருந்ததற்கு இரண்டு தரப்பினரின் இடையே இருந்த வர்த்தக உறவே உதாரணம். `தற்போது கீழக்கரையில் வசிக்கும் பட்டத்து காயர் என்ற சிறப்புப் பெயர் கொண்ட முஸ்லிம் குடும்பத்து மூதாதையர்களே சேதுபதிகளுக்குப் படைத்தலைவர்களாக இருந்தவர்கள்' என்கிற செய்தியும், ராமேஸ்வரக் கோவை என்கிற ராமேஸ்வரத்தில் குடியிருந்த மராட்டிய குருக்களுக்கும் சேதுபதிகளுக்கும் இருந்த ஆன்மிக உறவும், சிறந்த பன்னாட்டுத் துறைமுகமாக விளங்கிய கீழக்கரையிலிருந்து கடல் வழியாக சீனத்துக்கும் தூத்துக்குடிக்கும் வாணிபம் நிலவிய செய்தியையும் இந்த நூலின் மூலம் அறியமுடிகிறது.
இலக்கியம், கல்வெட்டுகள், செப்பேட்டு நிரூபணங்கள், தடயங்கள், ஆவணங்கள், சான்றுகள், ஆய்வுகள்வழி திரட்டி எடுக்கப்பட்ட மறவர் சீமையின் மர்ம பக்கங்களைப் புரட்டுங்கள்!
Be the first to rate this book.