ஒழுக்க வாழ்வை வலியுறுத்தும் நாடு நம் பாரத நாடு. தர்ம நெறி நடந்து, இந்த உலகிலேயே அமைதியும் அன்பும் நிரம்பிய சொர்க்க லோக வாழ்வை அனுபவிக்க நம் முன்னோர்கள் காட்டியிருக்கும் வழிமுறைகள் ஏராளம். இங்கேதான், ஆசைகளைத் துறக்கச் சொன்ன புத்தர்பிரான், மனித குலத்துக்கு வழி காட்டினார். வேத உபநிடதங்களும், இதிகாச புராணங்களும், சான்றோர் வாக்குகளும் மாமருந்தாகத் திகழ்ந்து, மனித குலத்தை முன்னேற்றப் பாதையில் வழி நடத்திச் செல்கின்றன.
இவ்வளவு இருந்தும் இன்றைய மனித வாழ்வில்தான் எத்தனை துக்கங்கள்; மனத் துயரங்கள்? வெறுப்பு, ஏமாற்றம் என எதிர்மறைச் சிந்தனைகளால் மனம் அலைக்கழிப்பு... _ இப்படி ஒரு நிலையை மனிதன் அனுபவிக்க என்ன காரணம்? காரணத்தை இந்த நூலில் அலசியிருக்கிறார் நூலாசிரியர் தமிழருவி மணியன். வெறுப்புற்ற உள்ளத்தை அமைதிப்படுத்தும் அருமருந்தாக இவரின் இனிய சொற்கள் இந்த நூலில் இதமாக ஒத்தடம் கொடுக்கின்றன. ‘மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்’ என, மனித வாழ்வோடு தொடர்புடைய முப்பது தலைப்புகளில் சக்தி விகடனில் இவர் தொடராக எழுதிய கட்டுரைகளின் நூல் வடிவம் இது.
Be the first to rate this book.