சீறத் நூல்களைப் படிக்கும்போது பல்வேறு மன்னர்களுக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கடிதங்கள் அனுப்பினார் என்று படிக்கிறோம். ஆனால் எந்தெந்த மன்னர்களுக்குக் கடிதங்கள் அனுப்பினார், அந்தக் கடிதங்களை யார் கொண்டு சென்றார்கள், அவற்றுக்கு அந்த மன்னர்களின் எதிர்வினைகள் எப்படி இருந்தன என்பதெல்லாம் பலருக்கும் தெரியாது.
அந்தச் செய்திகளை எல்லாம் தொகுத்து ஒரே நூலாக, அதுவும் விறுவிறுப்பாகப் படிப்பதற்கு ஏற்ற வகையில் நாடக வடிவில் ஆக்கித் தந்துள்ளார் மௌலவி கே.ஜே. மஸ்தான் அலீ பாகவி அவர்கள். மௌலவி அவர்கள் நல்ல பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் கொண்டவர். பன்னூலாசிரியர். தமிழ், உருது, அரபி ஆகிய மூன்று மொழிகளையும் ஆளத்தெரிந்தவர். அதனால்தான் இந்த மடல்களின் வரலாற்றைச் சுவையான நாடக வடிவில் ஆக்கித்தர அவரால் முடிந்திருக்கிறது.
மாநபி(ஸல்)அவர்கள் மன்னர்களுக்கு எழுதிய கடிதங்கள் பற்றிய நூல்தான் என்றாலும் வரலாற்று நோக்கிலும் அழைப்பியல் கோணத்திலும் பெரும் பயன் விளைவிக்கும் சிறந்த நூலாகும் இது.
Be the first to rate this book.