பாஸூ அலீயெவா எழுதிய ‘மண் கட்டி யைக் காற்று அடித்துப் போகாது’ என்ற நாவல் ஒரு பெண்ணின் துயர நினைவு களை விவரிக்கிறது. மண்ணின் மணத்துடன் உயிர்த் துடிப்புள்ள கதாபாத்திரங்களுடன், கவித்துவமான வர்ணனைகளு டன் கூடிய இந்த நாவலை எத்தனை தடவை வாசித்தாலும் அலுப்பதே இல்லை. தமிழில் இந்த நாவலை மொழியாக்கம் செய்திருப்பவர்: பூ.சோமசுந்தரம்.
தெற்கு ரஷ்யாவின் காஸ்பியன் கடல் பிரதேசத்தில் உள்ள தாஜிக்ஸ் தான் மலைகிராமம் ஒன்றில் பிறந்தவர் அலீயெவா. அவரது தாய் மொழி அவார். அதற்கு வரி வடிவம் கிடையாது. 1930-களில்தான் இதற்கு என புது வரி வடிவம் உருவாக்கப்பட்டது. ஆகவே, எழுத்து மரபு இம்மொழிக்கு கிடையாது. வாய்மொழி மரபைச் சேர்ந்த பாடல் களும், கதைகளும் மட்டுமே அவார் மக்களிடம் இருந்தன. பள்ளி வயதில் கவிதைகள் எழுத ஆரம்பித்து, பின்பு ரஷ்யாவின் மிகமுக்கிய கவிஞர்களில் ஒருவராக உயர்ந்தார் அலீயெவா. அவார் இன மக்கள் மண்ணை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதற்கு இந்த நாவல் சிறந்த உதாரணம்.
Be the first to rate this book.