உலக இலக்கியத்தின் உச்சியில் வைத்துக் கொண்டாடத்தக்கச் சிறுகதைகள் பலவும் தமிழில் எழுதப்பட்டுள்ளனவென நெஞ்சு நிமிர்த்திச் சொல்லலாம். நாவல் இலக்கியத்திலும் நாம் அடைந்திருக்கும் உயரம் அபரிமிதமானது. பெருமிதத்துடன் மெச்சத்தக்கது. தமிழ்ப் புனைவுலகின் பொற்காலம் எனக் குறிப்பிடுமளவிற்கு இப்போது அனேக படைப்புகள் புதியவர்களால் எழுதப்படுகின்றன. அவற்றுள் பலவும் இதுவரைப் பேசப்படாத, பேசத் தயங்கிய களங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உடைத்துப் பேசுவது இன்று புதிய உத்திமுறையாக உருவெடுத்துள்ளது. இந்தக் கதைகள் உடைத்துப் பேசுவதோடுத் தள்ளி நில்லாமல் மானுட விழுமியங்களை உரத்தும் பேசுகின்றன.
Be the first to rate this book.