ஒவ்வொரு வருடமும் விவசாயிகளுக்கு வருவது தற்காலிக வறுமைதான். ஒருவேளை சீதோஷ்ணம் சரியாக இருந்து பருவமழை பொய்க்காவிட்டால், இந்த வறுமையின் தீவிரம் சற்று குறைவாகவே இருக்கும். அவ்வளவாக வறுமை தெரியாது. யோசிக்க வைக்காது. ஆனாலும் விவசாயிகள் யோசிப்பதாக தெரியவில்லை. ஒவ்வொரு வருடமும் தற்காலிக வறுமை வந்தாலும் அதைக் களைய முயற்சிப்பதாகத் தெரியவில்லை.''இது ஆடி அரவட்டைதான். கொஞ்சம் பொறு. கார்த்திகைல எப்படியும் அறுவடையாகிவிடும். கஷ்டம் விடிஞ்சிடும்'' என்ற நம்பிக்கை ஆழமாய் உண்டு.
Be the first to rate this book.